வெறிநாய் கடித்து துப்புரவு பணியாளகள் உள்பட 8 பேர் காயம்

வெறிநாய் கடித்து துப்புரவு பணியாளகள் உள்பட 8 பேர் காயம்

Update: 2021-12-13 17:21 GMT
அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று ஒடுகத்தூர் பஸ் நிலையம் அருகே துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை வாரிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு வெறிநாய்கள் 4 தொழிலாளர்களை வெறிநாய் கடித்து குதறியது. மேலும் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் 4 பேரையும் வெறி நாய்கள் கடித்து விட்டு தப்பி ஓடின.

வெறி நாய் கடித்ததில் காயமடைந்த 8 பேரையும் உடனடியாக ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று வெறிநாய் கடிக்கு ஊசி போட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் அங்கு முக்கிய தடுப்பூசி இல்லாததால் இரண்டு பேரை மட்டும் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கைலாஷ் கூறினார்.
 
தகவல் அறிந்ததும் பேரூராட்சி ஊழியர்கள் 2 வெறி நாய்களை அடித்து கொன்று எரித்து விட்டனர். மேலும் இரண்டு வெறிநாய்கள் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது. அந்த நாய்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்