கல்வராயன்மலையில் 1200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 1200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கச்சிராயப்பாளையம்
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் மியாடிட் மனோ, ஏழுமலை, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மல்லிகைபாடி அருகேயுள்ள கோமக்காடு ஓடையில் 6 பேரல்களில் 1,200 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அதை அங்கேயே தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள மல்லிகைபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.