திருப்பத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததை கண்டித்து மறியல்
திருப்பத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மூடப்படாத பள்ளம்
திருப்பத்தூர் ஒன்றியம் ராவுத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள வாலேரி என்ற ஏரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. அதையடுத்து உபரி நீர் வீணாவதை தடுக்கும் வகையில் விவசாய பாசனத்திற்காக வாலேரி அரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை கொரட்டி ஏரிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி வாலேரி முதல் கொரட்டி ஏரி வரை கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இடையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குழாய் புதைத்து அதன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக குடியிருப்பு பகுதிகளில் பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளம் மூடாமல் உள்ளதால் இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆ௸்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று எலவம்பட்டி அருகே திருப்பத்துர் - சேலம் ரோட்டில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் ்றிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துறை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.