மேச்சேரி அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி

மேச்சேரி அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியானார்.

Update: 2021-12-12 22:10 GMT
மேச்சேரி:
மேச்சேரி அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியானார்.
பிளஸ்-2 மாணவர்
மேச்சேரி கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகன் வெங்கட்ராஜ் (வயது 17). இவர் மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில். வெங்கட்ராஜ் நண்பர்களுடன் நேற்று மதியம் மேச்சேரி அருகே எம்.காளிப்பட்டி ஏரியில் குளிக்க சென்றார். அப்போது நீச்சல் தெரியாததால் எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி வெங்கட்ராஜ் இறந்து விட்டார்.
உடல் மீட்பு 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், மேச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெங்கட்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் விபத்து தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்