குடில் பொம்மைகள்

குடில் பொம்மைகள் தயாராகி வருகின்றன.

Update: 2021-12-12 21:37 GMT
திருப்பரங்குன்றம், 
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 -ந்தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடுவார்கள். இதையொட்டி திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடில்பொம்மைகளை தயார் செய்து வருகின்றனர். அதில் குழந்தை ஏசு, மாதா, சூசை, ஏஞ்சல் உள்ளிட்ட 18 பொம்மைகள் கொண்டு தயார் செய்துவருகின்றனர்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு குடில் பொம்மைகள் ஏற்றுமதி செய்யலாம் என்ற எதிர்பார்ப்புடன் இரவு, பகலாக பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மழையால் களிமண் எடுக்க முடியவில்லை. மேலும் தயாரான பொம்மைகளுக்கு வர்ணம் தீட்டியபோதிலும் உலராத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் குடில் பொம்மைகள் வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால் பொம்மை தயாரிப்பாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்