108 ஆம்புலன்ஸ்சில் பெண்ணுக்கு குழந்தை
108 ஆம்புலன்ஸ்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சங்கர் என்பவரது மனைவி நாகஜோதி. நிறைமாத கர்ப்பிணி யான இவருக்கு வீட்டில் இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. உடனடியாக உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அனுப்பி வைத்தனர். கொட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு மேல்சிகிச்சை தேவைபட்டதால் உடன டியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கர்ப்பிணி நாகஜோதியை அழைத்துக்கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு சென்றனர்். அப்போது செல்லும் வழியில் ஓடும் ஆம்புலன்சிலே அந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மருத்துவ உதவியாளர் சிவக்குமார் மற்றும் டிரைவர் சதுரகிரி முதல்உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர்அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.