மல்லிகை கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை

மதுரை மல்லிகை கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனையானது.

Update: 2021-12-12 20:24 GMT
மதுரை, 
மதுரை மல்லிகைப்பூவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. மதுரை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மல்லிைகப்பூ விைளகிறது. இவை மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் இந்த மார்க்கெட்டில் நாள்தோறும் 8-லிருந்து 10 டன் வரை மல்லிகைப்பூ சந்தைப்படுத்தப்பட்டு, இங்கிருந்து பிற மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை (அதாவது கோடை காலத்தில் தான் அதிக விளைச்சல் இருக்கும்) மல்லிகை சீசன். தற்போது மழைக்காலம் என்பதால் மல்லிகை விளைச்சல் மிக குறைந்த அளவே இருக்கும்.
இதனால் மார்க்கெட்டிற்கு மல்லிகைப்பூ வரத்து குறைவாக உள்ளது. ஆனால் இந்த வாரம் கார்த்திகை மாத கடைசி வாரம் என்பதால் முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளன. திருமணம் உள்ளிட்ட பல்ேவறு சுப நிகழ்ச்சிகள் இன்று (திங்கட்கிழமை) நடக்கின்றன. சுப நிகழ்ச்சிகளில் முக்கிய அம்சமாக இருப்பதால், மல்லிைகப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. 
நேற்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.4 ஆயிரம் என விற்பனையானது. நேற்றைய மல்லிகைப்பூ விலையானது வரலாறு காணாதது. 
இதேபோல ஒரு கிலோ அரளி ரூ.500, முல்லை ரூ.1,800, பிச்சி ரூ.1,200, சம்பங்கி ரூ.250, செண்டு மல்லி ரூ.250 என விற்பனையானது. கனகாம்பரம், மரிக்கொழுந்து, கோழிக்கொண்டை, பட்டன்ரோஸ், ரோஜா ஆகியவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்து இருந்தது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், "இந்த வருடத்தில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் மல்லிகைப்பூவின் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இந்த வருடத்தில் நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதுபோல், இந்த வருடத்தின் உச்சபட்ச விலையாகும். இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் பனியும், தொடர் மழையும் தான். இவை இரண்டும் மல்லிகை பூவிற்கு எதிரி. மழைக்காலங்களில் மதுரை மார்க்கெட்டுக்கு வரும் பூக்களின் வரத்தும் குறைந்துள்ளதால்தான் இந்த விலையேற்றம்.
வரும் நாட்களில் சுப முகூர்த்தங்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவை வர இருப்பதால் பூக்களின் தேவைப்பாடு அதிகரித்து இருக்கிறது. எனவே அடுத்த சில வாரங்களுக்கு இந்த விலை ஏற்றம் தொடரும் என்றனர்.

மேலும் செய்திகள்