ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அ.தி.மு.க. வாங்குகிறதா

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அதிமுக வாங்குகிறதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்து உள்ளார்.

Update: 2021-12-12 20:14 GMT
மதுரை, 
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அ.தி.மு.க. வாங்குகிறதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்து உள்ளார்.
பேட்டி
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழை மக்களின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. அவரது திட்டங்கள் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது. ஜெயலலிதா, ஒரு தமிழக தலைவர் மட்டுமல்ல, உலகத்திற்கான தலைவர். உலக தலைவர்களால் பாராட்டப்பட்டவர். ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம், சாதாரண இல்லம் கிடையாது. எங்களை போன்ற கோடான கோடி தொண்டர்களின் கோவில் அது.
தீபாவும், தீபக்கும் ெஜயலலிதாவின் வேறு சொத்துக்களை எடுத்து கொள்வதற்கு எங்களுக்கு ஆட்ேசபனை இல்லை. ஆனால் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இது தான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தொடர்ந்து சட்டபோராட்டம் நடத்துவோம். வேதா இல்லத்தை அ.தி.மு.க. விலை கொடுத்து வாங்குமா என்பதை தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்.
உண்மை இல்லாமல் இருக்காது 
சென்னையில் மழை வெள்ளத்தில் மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வந்தனர். அதனை நேரில் பார்த்து இருந்தால் ஸ்டாலினை யாரும் பாராட்டி இருக்க மாட்டார்கள். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பிடியில் தான் போலீசார் இருக்கிறார்கள் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார் என்றால் அதில் உண்மை இல்லாமல் இருக்காது. ஏனென்றால் அண்ணாமலை சாதாரணமானவர் கிடையாது. அவர் அதிகாரியாக இருந்து தான் அரசியல்வாதியாக வந்திருக்கிறார். எனவே அவரது பேச்சில் உண்மை இருக்கும். எம்.ஜி.ஆருக்கு பிறகு மனிதாபிமானம் உள்ள ஒரு நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். ஒரு ரசிகராக அவருக்கு நான் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்