அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் அரியலூர் மாவட்டத்தில் ஒருவர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் யாரும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 9 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 12 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.