பின்னிப்பிணைந்து விளையாடிய பாம்புகள்
பின்னிப்பிணைந்து பாம்புகள் விளையாடின.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் மாதா கோவில் பின்புறம் உள்ள புல்வெளி நிறைந்த பகுதிக்கு, நேற்று மாலை வயல்வெளியில் இருந்து 2 பாம்புகள் வந்தன. சிறிது நேரத்தில் அவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து விளையாடின. இதனை பார்த்த அப்பகுதி குடியிருப்புவாசிகள், அதனை தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். சுமார் 25 நிமிடங்கள் அங்கு விளையாடிய பாம்புகள், பின்னர் அங்கிருந்து மீண்டும் வயல்வெளி பகுதிக்கு சென்றுவிட்டன.