வாலிபர் பிணம்
ராஜபாளையம் அருகே ரெயில்வே தண்டவாள பகுதியில் வாலிபர் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்கபுரம் ெரயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த வெள்ளைதுரை என்பவரது மகன் சக்தி சுமன் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.