கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது
களக்காடு அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பத்மநேரியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து களக்காடு போலீசார் பத்மநேரி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அரசு பள்ளி அருகே கைகளில் பிளாஸ்டிக் பைகளுடன் நின்ற 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதைப்பார்த்த போலீசார் விரட்டிச் சென்று ஒருவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பத்மநேரி தென்கரையை சேர்ந்த ராஜ் மகன் மகேஷ் என்ற கரடி (வயது 22) என்பதும், தப்பி ஓடியது கேசவநேரியை சேர்ந்த மகேஷ் என்ற சின்ன கரடி என்பதும், இவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட மகேஷ் என்ற கரடியிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.