கொரோனா தடுப்பூசி முகாம்
ஆலங்குளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகில் உள்ள கீழாண்மறைநாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் கீழாண்மறைநாடு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார மருத்துவர் செந்தட்டி காளை தலைமையில், சுகாதார ஆய்வாளர்மதியரசு மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் கொரோனா தடுப்பூசி போட்டனர்.