காளையார்கோவிலில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட அனுமதி கோரி பா.ஜனதா, கிராம மக்கள் சாலை மறியல்

ஆஞ்சநேயர் கோவில் கட்ட அனுமதி கோரி காளையார்கோவிலில் பா.ஜனதாவினர், கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Update: 2021-12-12 18:09 GMT
காளையார்கோவில்,

ஆஞ்சநேயர் கோவில் கட்ட அனுமதி கோரி காளையார்கோவிலில் பா.ஜனதாவினர், கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

பா.ஜனதா போராட்டம்

காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தின் மேல்கரையில் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலை நெடுஞ்சாலைதுறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அகற்றியதை கண்டித்து பா.ஜனதா மாவட்ட தலைவர் சக்தி தலைமையில் பா.ஜனதாவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று பா.ஜ.க.வினர் மற்றும் காளையார்கோவில் கிராம மக்கள் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அப்போது ஆஞ்சநேயர் கோவில் அகற்றியதை கண்டித்தும், கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்க கோரியும் அவர்கள் கோஷமிட்டனர். மேலும் அவர்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி, துணை சூப்பிரண்டு பால்பாண்டி, காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்