ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தவர் கைது

ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-12 17:50 GMT
காட்பாடி

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 3 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது. 

ரகசிய தகவலின்பேரில் பிளாட்பாரத்தில் யாராக இருந்த போலீசார் இ்ன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் ரெயிலில் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். 

அப்போது சந்தேகப்படும் வகையில் ஒருவர் சூட்கேஸ் வைத்திருந்தார். அந்த சூட்கேசை திறந்து பார்த்ததில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாபுலால் ஹா (வயது 43) என்பதும், 13 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

கஞ்சா கடத்தி வந்த பாபுலால் ஹாவை அவர்கள் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்