குளிர்பான கடையில் மதுபாக்கெட்டுகள் விற்றவர் கைது
குளிர்பான கடையில் மதுபாக்கெட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சோமநாயக்கன்பட்டி-தொம்மசிமேடு பகுதியில் உள்ள குளிர்பான கடையில் சோதனை செய்தனர்.
அப்போது கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கடையில் இருந்து 118 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் ஜான்பாஷா (வயது 39) என்பவரை கைது செய்தனர்.