புனித நீராடிய பக்தர்களிடம் திருடியவர் கைது

கன்னியாகுமரி கடலில் புனித நீராடிய பக்தர்களிடம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-12 17:25 GMT
கன்னியாகுமரி, 
கன்னியாகுமரி கடலில் புனித நீராடிய பக்தர்களிடம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருட்டு
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.
தற்போது கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் அய்யப்ப பக்தர்கள் தங்களது உடைமைகளை கடற்கரையில் வைத்து விட்டு கடலில் புனித நீராடுவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினமும் வந்த அய்யப்ப பக்தர்கள் கரையில் தங்களது உடைமைகளை வைத்து விட்டு கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒருவர் கரையில் இருந்த பொருட்களை திருடிக் கொண்டிருந்தார்.
 கைது
இதைகண்ட அங்கிருந்த சுற்றுலா பயணிகள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பொருட்களை திருடிய நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்