மக்கள் நீதிமன்றத்தில் 95 வழக்குகளுக்கு தீர்வு
வாணியம்பாடியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 95 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேசிய அளவிலான மக்கள் நீதி மன்றம் நடந்தது.
சார்பு நீதிபதி கே.ஆனந்தன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.மாலதி, நீதித்துறை நடுவர் எம்.காளிமுத்துவேல் மற்றும் ஓய்வ பெற்ற நீதிபதிகள் பி. ராமலிங்கம், எம். நந்தன் ஆகியோரும், வாணியம்பாடியில் உள்ள இரு வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகிய மூன்று நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சுமார் 95 வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு ரூ.2 கோடியே 26 லட்சத்து 10 ஆயிரத்து 900-க்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம் மூலம் மக்களுக்கு விரைந்து வழக்குகள் முடித்து வைக்கப்படுவதால் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடி வருவோர் மகிழ்ச்சியடைந்தனர்.