கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 54.3 மில்லி மீட்டர் பதிவு

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 54.3 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Update: 2021-12-12 16:36 GMT
கடலூர், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவ காற்று நிலவி வருகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. 

அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் ஓடியது.

இதேபோல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, தொழுதூர், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மழை அளவு

இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 54.3 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக பண்ருட்டியில் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-


காட்டுமன்னார்கோவில்- 54.3, லால்பேட்டை - 26, பரங்கிப்பேட்டை - 22, கொத்தவாச்சேரி - 21, புவனகிரி - 14, தொழுதூர் - 11, அண்ணாமலைநகர் - 10.4, பெலாந்துறை - 9.8, கடலூர் - 8.2, கலெக்டர் அலுவலகம் - 7.6, 

சிதம்பரம் - 7.4, வேப்பூர் - 6, லக்கூர் - 5.1, கீழசெருவாய் - 5., ஸ்ரீமுஷ்ணம் -3.3.. காட்டுமயிலூர் - 3, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, குப்பநத்தம், குறிஞ்சிப்பாடி தலா 2.

மேலும் செய்திகள்