ராணுவ தளபதி இன்று ஆய்வு செய்கிறார்

ராணுவ தளபதி இன்று ஆய்வு செய்கிறார்

Update: 2021-12-12 15:12 GMT
ஊட்டி

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இன்று (திங்கட்கிழமை) குன்னூருக்கு வருகிறார். பின்னர் அவர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.  

தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கும் நடவனே பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார். பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதிக்கு நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். 

பின்னர் அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார்.  நரவனே குன்னூருக்கு வருவதால், குன்னூர், வெலிங்டன், நஞ்சப்பசத்திரம், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்