தூத்துக்குடியில் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மோசடி

தூத்துக்குடியில் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்

Update: 2021-12-12 12:40 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் வெங்கடேசுவராபுரத்தை சேர்ந்தவர் காசிலட்சுமி (வயது 21). இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடிக் கொண்டு இருந்தாராம். அப்போது ஒரு வெப்சைட்டில் சென்ற போது, ஒரு வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு உள்ளார். அந்த எண்ணில் தொடர்பு கொண்ட மர்மநபர், அவரிடம் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி உள்ளார். இதனை நம்பிய காசிலட்சுமி ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் முதலீடு செய்தாராம். அதன்பிறகு அவருக்கு கூடுதல் பணமும் கிடைக்கவில்லை. தான் செலுத்திய பணத்தையும் பெற முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காசிலட்சுமி தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகிறார்.

மேலும் செய்திகள்