போடியில் விபத்து நடக்கும் இடங்களில் கலெக்டர் ஆய்வு

போடியில் விபத்து நடக்கும் இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-12-12 12:21 GMT
போடி:
போடி நகரில் பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவர் சிலை, வள்ளுவர் சிலை, கட்டபொம்மன் சிலை மற்றும் இரட்டை வாய்க்கால், தேனி-கொச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகிறது. இந்த‌ இடங்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்