போடி அருகே தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த லாரி
போடி அருகே தடுப்பு சுவரில் மோதி லாரி கவிழ்ந்தது.
போடி:
சேலத்தில் இருந்து புண்ணாக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி போடிக்கு வந்து கொண்டிருந்தது. போடி அடுத்த அணைக்கரப்பட்டி விலக்கு அருகே வந்தபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.