மாவிலிப்பட்டி சாலையில் கண்மாய் நீர் செல்வதால் அவதி

திருப்பரங்குன்றம் அருகேமாவிலிப்பட்டி சாலையில் கண்மாய் நீர் செல்வதால் அவதி ஏற்பட்டது.

Update: 2021-12-11 20:29 GMT
திருப்பரங்குன்றம். 
திருப்பரங்குன்றம் அருகேமாவிலிப்பட்டி சாலையில் கண்மாய் நீர் செல்வதால் அவதி ஏற்பட்டது.
தொடர் மழை
திருப்பரங்குன்றம் அருகே மாவிலிப்பட்டி அமைந்து உள்ளது. தென்பழஞ்சி பிரிவில் இருந்து மாவிலிப்பட்டிக்கு ரோடு செல்லுகிறது. இதன்வழியாக மாவிலிப்பட்டி, செக்க னூரணிக்கு அரசு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த ரோட்டின் வழியாக திருமங்கலம் மற்றும் செக்கானூரணிக்கு அடிக்கடி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் மாவிலிப் பட்டி கண்மாயில் இருந்து தென்பழஞ்சி கண்மாய்க்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்தாலும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ரோடானது கண்மாயாக நிலைகுலைந்து சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. 
மேலும் மாவிலிப்பட்டி ரோட்டில் உயராக தரைப்பாலம் இல்லாததால் அந்த பகுதி வழியாக தரையோடு தரையாக உள்ள ஓடைவழியே தென்பழஞ்சி கண்மாய் தண்ணீரும், மழை தண்ணீரும், பெருக்கெடுத்துவெள்ளமாக வருவதால் சாலை மூழ்கி உள்ளது
போக்குவரத்து நிறுத்தம்
இதனால் மாவிலிப்பட்டி, செக்கானூரணிக்கு பஸ் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாவிலிப்பட்டிக்கு 4 மற்றும் 2 சக்க வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவிலிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தென்பழஞ்சி வரை வரக்கூடிய பஸ்சில் வந்து மூழ்கிய சாலை வழியே தண்ணீரில் நீந்தி சென்று வருகின்றனர். மேலும் சிலர் தென்பழஞ்சி பகுதி சார்ந்த தோட்டங்கள் வழியாக மாற்றுபாதையை பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்