விஷம் குடித்து பெண் சாவு

நாங்குநேரி அருகே விஷம் குடித்து பெண் தற்காலை செய்து கொண்டார்.

Update: 2021-12-11 20:05 GMT
நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள நம்பிநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 37) கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்து (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கண்ணன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. விரக்தி அடைந்த முத்து வீட்டில் விஷம் குடித்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஏர்வாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு   தூண்டியதாக   கண்ணன்    மற்றும்  சிங்கிகுளத்தை சேர்ந்த மகாலட்சுமி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்