நடுரோட்டில் பழுதான அரசு பஸ்
வேலூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா செல்லும் அரசு பஸ் மக்கான் சிக்னலில் சென்று கொண்டிருந்த போது திடீரென பழுது ஏற்பட்டு நடுரோட்டில் நின்றது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் பஸ்சை தள்ளி சாலையோரமாக நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் அங்கு வந்து போக்குவரத்தை சீர்செய்தார்.