தேவகோட்டை அருகே உள்ள முப்பையூர் மேலக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகள் சவுமியாதேவி (வயது 19). கல்லூரி மாணவி. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது சவுமியாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.