வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
வேலூா் மாவட்டம் முழுவதும் 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நட
வேலூர்
வேலூா் மாவட்டம் முழுவதும் 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தடுப்பூசி
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடக்கிறது. தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேலூர் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை 77 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று 505 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
சத்துவாச்சாரி வ.உ.சி. நகரில் நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
ஆய்வின் போது மாநகர் நகர்நல அலுவலர் மணிவண்ணன், உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் இருந்தனர்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் பொது இடங்களில் கூடும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
முககவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஓரிரு நாட்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.