ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
கொரோனா தொற்று பரவலை தடுக்க ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் வெளி இடங்களில் இருந்துவரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்கும்விதமாக ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி சுங்கச்சாவடி முன்பு சுகாதாரத்துறையினர் அனைத்து வெளிமாநில வாகனங்களையும் நிறுத்தி அதில் வருபவர்களை பரிசோதனை செய்கின்றனர்.
2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்பது குறித்து ஆவணங்களையும், செல்போனில் குறுந்தகவல்களை சரிபார்த்து தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னரே ராமேசுவரம் நகருக்குள் அனுமதிக்கின்றனர்.
விடுமுறை நாளான நேற்று ஏராளமான வாகனங்களில் வந்த வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.