தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களை டி.ஐ.ஜி ஆய்வு

தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆய்வு செய்தார்.

Update: 2021-12-11 17:09 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களை நேற்று நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

அனைத்து மாவட்டத்திலும் உள்ள காவல்துறையின் ஆயுதப்படைப்பிரிவை வருடத்திற்கு ஒரு முறை காவல்துறை டி.ஐ.ஜி. ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஆயுதப்படை போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் உபகரணங்களை பார்வையிட்டார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் குறைகளை சரி செய்வதாக உறுதியளித்தார்.
மேலும் தூத்துக்குடி மாவட்ட போலீசாரின் வாகனங்களை பார்வையிட்டு அவைகள் சரியான முறையில் பராமரிப்பு செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.

அணிவகுப்பு மரியாதை

முன்னதாக மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து தலைமையில் நடந்த ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஏற்றுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் சூப்பிரண்டு இளங்கோவன், பயிற்சி துணை சூப்பிரண்டுகள் கணேஷ்குமார், ஷாமளாதேவி, பவித்ரா, மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்