தேனியில் ஸ்கூட்டருக்குள் புகுந்த நல்லபாம்பு

தேனியில் ஸ்கூட்டருக்குள் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது.

Update: 2021-12-11 17:04 GMT
தேனி:
தேனி அருகே உள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் கேசவன். இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் தேனியில் பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்தார். அப்போது அவர் ஸ்கூட்டரை பேக்கரிக்கு வெளியே நிறுத்தி இருந்தார். பின்னர் அவர் மீண்டும் திரும்ப வந்து ஸ்கூட்டரை எடுக்க முயன்றார். அப்போது ஸ்கூட்டருக்குள் ஒரு பாம்பு இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து ஸ்கூட்டருக்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. 
இதுபோல போடி வலசைதுறைரோடு பகுதியை சேர்ந்தவர் தெய்வம். கூலித்தொழிலாளி. இவரது வீட்டுக்குள் நேற்று மாலை ஒரு பாம்பு புகுந்தது. இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து அங்கு பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

மேலும் செய்திகள்