மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி

ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி இறந்தார்.

Update: 2021-12-11 16:53 GMT
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 56). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் எப்போதும்வென்றானில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பசுவந்தனை விலக்கு அருகே வந்தபோது கோவையில் இருந்து தூத்துக்குடியை நோக்கி வந்த கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பால்ராஜ், சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். காரில் வந்த கோவை மணிஸ்வரன்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் கண்ணன் லேசான காயத்துடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கார் டிரைவர் எத்தியநாயக்கர்பாளையத்தை சேர்ந்த வெள்ளையங்கிரி மகன் சம்பத் மீது எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்