விக்கிரவாண்டி அருகே விபத்தில் விவசாயி பலி
விக்கிரவாண்டி அருகே விபத்தில் விவசாயி பலியானாா்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 61), விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மனைவி செல்வியுடன்(55) மொபட்டில் பனையபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். தொரவி அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் குணசேகரன் ஓட்டி வந்த மொபட், டிராக்டர் மீது மோதியது. இதில் குணசேகரன், செல்வி ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். செல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.