பழனி அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை
பழனி அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.
பழனி:
பழனி அருகே கோதமங்கலத்தில் உள்ள தோட்டத்து கிணற்றில் முதியவர் பிணம் கிடப்பதாக பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த முதியவர் பழனி பெரியப்பாநகரை சேர்ந்த லட்சுமணன் (வயது 80) என்பதும், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு இருந்ததால் விரக்தியடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.