தமிழக கேரளா எல்லையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு

தமிழக கேரளா எல்லையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு

Update: 2021-12-11 16:14 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஆய்வு பணியை மேற்கொள்ள கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் வந்தார். பின்னர் அவர் திடீரென கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியான வீரப்பகவுண்டனூரில் உள்ள போலீஸ் சோதனை சாவடிக்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை போலீசார் சரியான முறையில் சோதனை செய்கிறார்களா? அதற்கான பதிவேடுகள் எழுதப்படுகிறதா? தினசரி எத்தனை வாகங்கள் கேரளா செல்கின்றன? தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும்வாகனங்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது. 

கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் எவ்வாறு சோதனையிட படுகிறது என்று போலீசாரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திருமால், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரகாஷ், சந்திரன், மாதவன் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்