முப்படை தலைமை தளபதிக்கு நினைவிடம் அமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

முப்படை தலைமை தளபதிக்கு நினைவிடம் அமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

Update: 2021-12-11 15:17 GMT
ஊட்டி

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். எனவே அதை நினைவு கூறும் வகையிலும் அஞ்சலி செலுத்தவும் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று குன்னூர் வெலிங்டன் கண்டோமெண்ட் பகுதி பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. கையெழுத்து பெற்ற பின்னர் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மத்திய அரசுக்கு மனு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் கூறும்போது, ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடமான நஞ்சப்பசத்திரம் பகுதி வருவாய்த்துறைக்கு சொந்தமானது. 

இந்த இடத்தில் முப்படை தலைமை தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகளை போற்றும் விதமாக நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். காட்டேரி பூங்காவுக்கு பிபின் ராவத் என்று பெயர் சூட்ட வேண்டும். மேலும் ரன்னிமேடு ரயில் நிலையம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் என்று பெயரிட வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்