கோத்தகிரி அய்யப்பன் கோவிலில் மகோற்சவ விழா
கோத்தகிரி அய்யப்பன் கோவிலில் மகோற்சவ விழா
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதி பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோவிலில் கார்த்திகை மாத புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கார்த்திகை மாத சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று தாலப்பொலி மகோற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் நேற்று காலை அய்யப்பனுக்கு 10 மணிக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு, பகல் 12 மணிக்கு தாலப்பொலி இசை முழங்க, அலங்கார பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு அய்யப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் 3 மணிக்கு மாலை நேர பூஜை, 6 மணிக்கு இரவு பூஜை நடைபெற்ற பிறகு, ஹரிவராசனம் பாடலுடன் நடை அடைக்கப் பட்டு விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அய்யப்பன் கோவில் கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.