கொரோனா தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு

கொரோனா தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு

Update: 2021-12-11 14:59 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். 

சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. 

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஸ்டோன்ஹவுஸ், மினிகிளினிக், தலை யாட்டிமந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி, லவ்டேல் சந்திப்பு ஆகிய பகுதி களில் நடந்த முகாமை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தார். 

தொடர்ந்து அங்கு தடுப்பூசி போட வந்த ஆதிவாசி மக்களிடம் முதல் மற்றும் 2-வது தடுப்பூசி போடப்பட்டு உள்ளதா என்று கேட்டறிந்தார். 
தொடர்ந்து கலெக்டர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- 

வீடுகளுக்கு சென்று செலுத்த வேண்டும் 

உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் யாராவது தடுப்பூசி செலுத்த வில்லை என்றால் அவர்களிடம் வீ்ட்டின் அருகே உள்ள தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்க வேண்டும். மேலும் 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இதேபோன்று நீங்கள் படிக்கும் கல்லூரியில் பிற நண்பர்கள் தடுப்பூசி போட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுபோன்று தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

இந்த ஆய்வின்போது ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, ஊட்டி வட்டார மருத்துவ அதிகாரி முருகேசன், நகர்நல அலுவலர் டாக்டர் ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உதவி இயக்குனர் 

கோத்தகிரி பேரூராட்சி சார்பில் 9 மையங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. முகாமை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா ஆய்வு செய்தார். ஆய்வின் போது கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.

 மேலும் பேரூராட்சி வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலமான, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்