அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டம்
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டம்
கோவை
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், இதற்கான தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க கோரியும்
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.
இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
இதில், காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வி.எஸ்.சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தலைவர் குணசேகர் கூறுகையில், நீட் தேர்வால் ஏழை மாணவ-மாணவிகளின் மருத்துவர் கனவு நிறைவேற முடியாத நிலை உள்ளது.
எனவே தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் முடித்து வைத்து பேசினார்.