கம்பத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம்
கம்பத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கம்பம்:
கம்பத்தில் 21 ரேஷன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த கடைகளில் தற்போது நடப்பு மாதத்திற்கான அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அரிசி பயன்படுத்த முடியாத நிலையில் பழுப்பு நிறத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் கடையில் அரிசியை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் கம்பத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி வினியோகம் ஆகாமல் தேக்கம் அடைந்து உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் குறித்து கேட்டால் அவர்கள் முறையான பதில் தெரிவிப்பதில்லை. எனவே நல்ல அரிசியை வினியோகிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.