மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு தி.மு.க.வினர் ஆறுதல்

மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு தி.மு.க.வினர் ஆறுதல் கூறினர்.

Update: 2021-12-10 21:20 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி சின்னத்தம்பிநாடாரூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் அமல்ராஜ் (வயது 58) பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சின்னத்தம்பிநாடாரூருக்கு சென்று அமல்ராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் சீனித்துரை, பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்