100 சதவீதம் தூய வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும்
100 சதவீதம் தூய வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என மாவட்ட பார்வையாளர் பாஸ்கரன் பேசினார்.
தஞ்சாவூர்;
100 சதவீதம் தூய வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என மாவட்ட பார்வையாளர் பாஸ்கரன் பேசினார்.
ஆய்வுக்கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்2022 பணியின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், முதன்மை செயல் அலுவலருமான பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் மீது வருகிற 20-ந் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு முகாமில் பெறப்பட்ட படிவங்கள் அனைத்தையும் நிலுவையில்லாமல் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்படி பதிவேற்றம் செய்த படிவங்கள் குறித்து களஆய்வு மேற்கொண்டு 100 சதவீதம் தூய வாக்காளர் பட்டியல் என்ற இலக்கை அடைய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விசாரணை
பின்னர் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பாஸ்கரன், பிள்ளையார்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று விண்ணப்பதாரர்களிடம் விசாரணை நடத்தினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், வருவாய் கோட்டாட்சியர்கள் லதா (கும்பகோணம்), பிரபாகரன் (பட்டுக்கோட்டை), ரஞ்சித் (தஞ்சை), தாசில்தார் (தேர்தல்) ராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.