வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கன்னியாகுமரி வருகை
தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார்.
கன்னியாகுமரி,
தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். அங்கு அவருக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுரேஷ்ராஜன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் அதிகாரிகள் அமைச்சர் ராமச்சந்திரனை சந்தித்து பேசினர்.
அமைச்சர் ராமச்சந்திரன் இன்று (சனிக்கிழமை) நாகர்கோவில் வடசேரியில் உள்ள ரப்பர் கழக அலுவலகத்தில் நடைபெறும் அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருக்கும் அரசு ரப்பர் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு, கீரிப்பாறை அரசு ரப்பர் கழக நிலையத்தை பார்வையிடுகிறார்.