நாகர்கோவிலில் லாட்ஜில் பட்டதாரி வாலிபர் தற்கொலை
நாகர்கோவிலில் லாட்ஜில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்,
பெங்களூருவில் உள்ள சாம்ராஜ் பேட்டை 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஷருண் குமார் (வயது 25), பட்டதாரி. இவர் நாகர்கோவிலில் உள்ள நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, கடந்த 7-ந் தேதி ரெயில் மூலம் குமரிக்கு வந்தார். பின்னர் அவர் வடசேரியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லாட்ஜில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் லாட்ஜுக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.