திருச்சி வந்த 2 பயணிகளுக்கு கொரோனா தொற்று

திருச்சி வந்த 2 பயணிகளுக்கு கொரோனா தொற்று

Update: 2021-12-10 19:28 GMT
செம்பட்டு,டிச.11-
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை 5.30 மணி அளவில் சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சி கல்பாளையம் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் கொரோனா தொற்று இருப்பதற்கான சான்றிதழுடன் வந்தது தெரியவந்தது. இதேபோல் காரைக்குடியை சேர்ந்த 56 வயது ஆண் பயணி ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழில் கொரோனா இல்லை என திருத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்