மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் சாவு

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2021-12-10 19:07 GMT
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மெய்க்காவல் புத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 55). இவர் நேற்று முன்தினம் இரவு வீரசோழபுரம் கடைவீதிக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் தனது மொபட்டில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, எதிரே அதே கிராமத்தில் உள்ள மெயின்ரோடு தெருவை சேர்ந்த சம்பந்தத்தின் மகன் பிரசாந்த்(28) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியனை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டநிலையில், பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாண்டியனின் மகன் பாலாஜி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்