ஆடுகள் திருடிய கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது

தேவகோட்டை அருகே ஆடுகள் திருடிய கல்லூரி மாணவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-10 18:33 GMT
தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நடுவிக்குடியை சேர்ந்த அய்யப்பன் (வயது 50), தாழையூர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீட்டின் முன்பு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் அந்த பகுதிகளில் நேற்று முன்தினம் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர், மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை தூக்கிக்கொண்டு தப்பினர். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள், ஆறாவயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சூசை மைக்கேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று, ஒரு மோட்டார் சைக்கிளில் ஆடு திருடி சென்ற 3 பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிச் சென்ற மற்ற 3 பேரையும் மடக்கினார்கள். இதையடுத்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-
 ராமநாதபுரம் மாவட்டம் தளக்காவூர் அஜய் (வயது 19), இளமணி வல்லரசு (19), கீழ்மருதங்குளம் சரவணன் (19), ஆணையர் கோட்டை கருப்பசாமி பாண்டியன் (19), சி.கே.மங்கலம் மனோஜ் (19), ஆயங்குடி ஜெகன்பாலாஜி (19). இவர்கள் 6 பேரும் ஒரே கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்