சி.ஐ.டி.யூ. சார்பில் வாகன நிறுத்த போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் வாகன நிறுத்த போராட்டம் நடந்தது.

Update: 2021-12-10 18:19 GMT
ராமநாதபுரம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் வாகன நிறுத்த போராட்டம் நடந்தது.

வாகன நிறுத்த போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் வரியை ரத்து செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 10 நிமிடம் வாகன நிறுத்த பேராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். குடிநீர் வாரிய சங்க மாவட்ட செயலாளர் மலைராஜன், தனியார் மோட்டார் வாகன சங்க செயலாளர் ஆனந்த், ஆட்டோ சங்க பொருளாளர் ரமேஷ், அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை செயலாளர் போஸ், துரைபாண்டி, ஓய்வு பெற்றோர் நலச்சங்க தலைவர் மணிகண்ணு, பஞ்சாலை சங்க மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த வழியாக சென்ற வாகனங்களை 10 நிமிடம் நிறுத்தி மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி பேசி கோஷமிட்டனர்.

தொண்டி, ராமேசுவரம்

தொண்டி அரசு மருத்துவமனை முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் 10 நிமிட வாகன நிறுத்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டசெயலாளர் சந்தானம் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு, தாலுகா தலைவர் தோட்டாமங்கலம் ராசு, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் சாலைகளில் வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைசெயலாளர் கருணா மூர்த்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் சுடலைகாசி, பவுல்ராஜ், ஞானசேகர், இந்திய மாணவர் சங்க நிர்வாகி வில்லியம்ஜாய்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல பரமக்குடி, கமுதி, அபிராமம், சிக்கல், கடலாடி ஆகிய 6 இடங்களில் இந்த வாகன நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்