இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்
வேலூர்
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வேலூர் மாவட்டக்குழு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சம்மேளன மாவட்ட செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. லதா, மாவட்ட தலைவர் காவேரி, பொருளாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பசி, சத்து குறைபாட்டை போக்கிட வேண்டும். அனைவருக்கும் தரமான பொதுவினியோக திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்கவும், கண்ணியத்துடன் வாழ உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில், இந்திய மாதர் தேசிய சம்மேளன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.