ஸ்கூட்டர் திருடிய வாலிபர் கைது

ஸ்கூட்டர் திருடிய வாலிபர் கைது

Update: 2021-12-10 17:26 GMT
பல்லடம்,
பல்லடம் அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவர் கடந்த 7-ந்தேதி தனது ஸ்கூட்டரில் மங்கலம் ரோட்டில் உள்ள கடைக்கு சென்றார். கடை முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உள்ளே பொருட்கள் வாங்கச் சென்ற சென்றவர் திரும்பி வந்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை பல்லடம் பனப்பாளையம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது அந்த ஸ்கூட்டரை வாலிபர் ஒருவர் ஓட்டி வந்தார். அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில் அவர் சேலத்தைச் சேர்ந்த பிரவீன்(23) என்பதும் ஸ்கூட்டரை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிரவீன் மீது சேலம் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்